Sorting by

×

உத்தர பிரதேசத்தில் 35 வயதான திருமணமான பெண் ஒருவர், தன்னை இரு இளைஞர்கள் மிரட்டி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியதாக அளித்த புகாரின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட இரு இளைஞர்களும் ஓராண்டுக்கும் மேலாக சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், புகாரளித்த பெண்ணை அந்த இளைஞர்கள் இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

இதையடுத்து பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய அந்த பெண்ணுக்கு ரூ. 1,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களுக்கும் தலா ரூ. 500 நிவாரணத் தொகையாக வழங்கிட வழக்கை விசாரித்த கூடுதல் நீதிமன்ற நீதிபதி ரவி திவாகர் அந்த பெண்ணுக்கு உத்தரவிட்டதுடன் அந்த இளைஞர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பெண் அளித்திருந்த பொய்யான பாலியல் புகாரை மெத்தனப் போக்குடன் கையாண்டதுடன், முறையாக விசாரணை மேற்கொள்ளாமல், புகாரில் குற்றஞ்சாட்டப்பட்ட இரு இளைஞர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பஹேதி காவல்துறை அதிகாரிகள் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரேலி எஸ்எஸ்பி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த கொடுமைக்கும் அதனால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கும் நிவாரணமாக வெறும் ரூ. 500 வழங்கினால் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதே அந்த இளைஞர்கள் தரப்பு வாதமாக உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *