Sorting by

×

பாலியல் புகாரில் இன்று கைதான எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி, அவற்றை காணொலியாகப் பதிவு செய்திருப்பதாக எழுந்த புகாரை தொடா்ந்து, எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும், எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா ஆகியோா் மீது ஏப். 27-ஆம் தேதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதைத்தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரஜ்வல் ரேவண்ணா நீக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) கா்நாடக அரசு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகர பேருந்துகளில் 2ம் கட்டமாக 248 கதவுகள் பொருத்தம்

ஜெர்மனியின் பெர்லினில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த ரேவண்ணாவை கர்நாடக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தது. அதிகாரிகள் அவரின் பைகளை பறிமுதல் செய்து தனி காரில் கொண்டு சென்றனர்.

பின்னர் அவர் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை(மே 31) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழு 14 நாட்கள் அனுமதி கோரியிருந்த நிலையில் நீதிமன்றம் 6 நாட்கள் வழங்கியுள்ளது. ரேவண்ணா வருகையையொட்டி பெங்களூரு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *