ஜூன் 4-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல்கள் வெளிவரவுள்ள நிலையில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மே 30-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்கள். ஆன்மிக பயணம் என பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்டாலும் அரசியல் பயணம் என விமர்சிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
அமித் ஷா
மே 30 முதல் ஜூன் 1-ம் வரை கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலுள்ள பைரவர் கோவிலில் வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ளனர். நம்மிடம் பேசிய டெல்லி பா.ஜ.க-வினர் சிலர் “இது முழுக்க முழுக்க ஆன்மிக ரீதியான பயணம்தான். 2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு முடிந்ததும் தியானம் மேற்கொள்ள கேதர்நாத் சென்றார் பிரதமர் மோடி. அதுபோல இந்தமுறை கன்னியாகுமரியை தேர்வு செய்திருக்கிறார். அமித் ஷா திருமயத்திலுள்ள பைரவர் கோவிலில் வழிபட ஏற்கனவே திட்டமிட்டார். அது ரத்தானதால், தேர்தல் பிரசாரம் முடிந்த தருவாயில் வர இருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் வந்தபிறகு பயணிப்பது சரியாக இருக்காதென இப்போது திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே ஆன்மிகத்தை தாண்டி இதில் ஒன்றுமேயில்லை” என்றனர்.
விவரமறிந்த சிலரோ “அமித் ஷா மற்றும் நரேந்திர மோடி என இருவருமே ஜோதிடத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள். அவரவர்களின் நட்சத்திரத்தின்படி வழிபாடு செய்யச் உகந்த இடங்களை தேர்வு செய்து இம்முடிவை எடுத்திருக்கிறார்கள்” என்கிறார்கள்.
செல்வப் பெருந்தகை
இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை “2024 மக்களவைத் தேர்தல் இறுதி பரப்புரை முடிந்து, மே 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிந்து, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தியானம் செய்வதென நரேந்திர மோடி திட்டமிட்டிருக்கிறார். இறுதிகட்ட தேர்தல் நடைபெற இருக்கிற 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.
பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கும் செல்வார் என்பதற்கு இந்தத் ‘தியான நாடகம்” ஒரு உதாரணமாகும்” என சாடியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸார் சிலர், “இது ஆன்மிக பயணம் அல்ல, அரசியல் நாடகம். முதற்கட்ட பிரசாரம் முடிந்த பிறகு தமிழர்கள் குறித்தும் தமிழ்நாடு குறித்து அவதூறாக பேசிவிட்டு அதை தொடைக்க இப்போது தமிழகம் வந்திருக்கிறார். வந்துவிட்டு தமிழ்நாடு வந்தால்தான் மனநிறைவாக இருக்கிறதென ட்வீட் செய்வார்கள்” என்றனர்.
மோடி, அமித்ஷா
அரசியல் நோக்கர்கள் சிலர், “மோடி, அமித்ஷாவின் தமிழ்நாடு பயணம் அரசியலா ஆன்மிகா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு மதுரை, திருச்சி, ராமேஸ்வரம் என ஆன்மிக பயணம் மேற்கொண்டார் மோடி. தேர்தல் சமயத்தில் பிரசாரத்துக்கு பலமுறை வந்து சென்றார். இப்போது தேர்தல் முடிந்தபிறகும் வருகிறார் என்றால் தமிழ்நாட்டோடு பிரதமர் பிணைப்போடு இருக்கிறார் என காண்பிக்கும் திட்டமாகக் கூட இருக்கலாம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
10 ஆண்டுகள் என்ன செய்தார் மோடி?
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
