Sorting by

×

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படத்தில் இணைந்துள்ளார்கள்.

பிகைண்ட்வுட்ஸ் தயாரிப்பில் மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் பிரபுதேவா, யோகி பாபு, அஜு வர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் ரெடின் கிக்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, லொல்லுசபா சாமிந்தாதன், குக்வித்கோமாளி தீபா ஆகியோரும் இணைந்து நடிக்கிறார்கள்.

என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!

இந்தப் படம் ஏ.ஆர்.ரஹ்மான் -பிரபு தேவா இணையும் 6ஆவது திரைப்படமாகும். முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் -பிரபு தேவா 1994ஆம் ஆண்டு காதலன் படத்தின் மூலம் இணைந்தார்கள். ஷங்கர் இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதற்கடுத்து லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு ஆகிய படங்களும் இவர்களது கூட்டணியில் வெற்றி பெற்றது. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.

அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *