Sorting by

×

கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 96.02 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 8,11,172 மாணவ, மாணவிகளில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 91.17%. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

இந்த நிலையில், கோவை 96.02 சதவிகிதத்துடன் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 95.56 சதவிகிதத்துடன் இரண்டாமிடமும், திருப்பூர் 95.23 சதவிகிதத்துடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.

சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை 91.68 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 17-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் 89.41 சதவிகிதம் தேர்ச்சி பெற்று விழுப்புரம் மாவட்டம் உள்ளது.

பிளஸ் 12 பொதுத் தேர்வில் திருப்பூர் முதலிடமும், ஈரோடு இரண்டாமிடமும் பிடித்திருந்த நிலையில், கோவை மாவட்டம் நான்காமிடம் பிடித்திருந்தது.

அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்திருந்தது. கோவை மாவட்டம் 12-வது இடத்தை பெற்றிருந்தது.

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/ , https://results.digilocker.gov.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *