Sorting by

×

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டுள்ளது.

தேர்வு எழுதிய 8,11,172 மாணவ, மாணவிகளில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 91.17%. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதியவர்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 8,418 ஆகும்.

அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3,432 பேரும், குறைந்தபட்சமாக தாவரவியலில் 2 பேரும் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பாடவாரியாக விவரம்:

தமிழ் – 8

ஆங்கிலம் – 13

இயற்பியல் – 696

வேதியியல் – 493

உயிரியல் – 171

கணிதம் – 779

விலங்கியல் – 29

வணிகவியல் – 620

கணக்கு பதிவியல் – 415

பொருளியல் – 741

கணினிப் பயன்பாடு – 288

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் – 293

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *