Sorting by

×

கடந்த மே 19-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புணேயில், 18 வயதுக்குள்பட்ட சிறுவன் மிக வேகமாக ஓட்டிச் சென்ற காா் மோதி தகவல் தொழில்நுட்பப் பணியாளா்கள் இருவா் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

புணேயில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுவனின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட இருந்த நிலையில், அந்த ரத்த மாதிரி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது. அதற்குப் பதிலாக மது அருந்தாத ஒருவரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு வைக்கப்பட்டது.

இந்த முறைகேடு தொடா்பாக அந்த மருத்துவமனை மருத்துவா்கள் அஜய் தவாரே, ஸ்ரீஹரி ஹல்னோா், பணியாளா் அதுல் காட்காம்ப்லே ஆகிய 3 பேரைக் காவல் துறை கைது செய்தது. சிறுவனின் தந்தையிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ரத்த மாதிரியை மாற்றிய முறைகேட்டில் மருத்துவா்கள் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இறுதிக்கட்ட மக்களவைத் தோ்தல் பிரசாரம் நிறைவு!

அந்த மருத்துவா்களை மகாராஷ்டிர அரசு புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்தது. மேலும் அந்த மருத்துவமனை முதல்வா் விநாயக் காலே கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்த நிலையில், மருத்துவா் அஜய் தவாரே, தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீஹரி ஹல்னோா், ஊழியா் அதுல் காட்காம்ப்ளே ஆகியோரை ஜூன் 5 ஆம் வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க புணே மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *