புணேவில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை மற்றும் தாத்தாவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
புணேவில், மே 19ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவில், மதுபோதையில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கிய சிறுவன் மோதியதில் இருவர் பலியாகினர்.
இந்த வழக்கில் குற்றவாளி சிறுவன் என்பதால், சட்டப்பிரிவு 75 மற்றும் 77ன்படி, குழந்தைகளை கவனக்குறைவாக விடுதல் மற்றும் குழந்தைகளுக்கு போதை அல்லது மதுப் பழக்கம் ஏற்பட அனுமதிப்பது போன்ற பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, வீட்டின் கார் ஓட்டுநரை சரணடையக் கூறி மிரட்டி கட்டாயப்படுத்தி வழக்கை திசை திருப்ப முயன்ற குற்றச்சாட்டின் கீழ் சிறுவனின் தாத்தா சுரேந்திர குமாரும் கைது செய்யப்பட்டார்.
முதலில் சிறுவனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றத்தின் அடிப்படையில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு ஜூன் 5 வரை 14 நாட்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே இந்த வழக்கில் கைதான சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து புணே மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


