Sorting by

×

ஐபிஎல் தொடரில் பிரபலமான அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இதில் சச்சின், ரோஹித் போன்றவர்கள் கேப்டன்களாக விளையாடியுள்ளார்கள். 5 முறை கோப்பையை வென்றும் அசத்தியுள்ளார்கள்.

தற்போது ஹார்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டிகளில் 4-இல் மட்டுமே வென்று 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் நாளை (மே.17) லக்னௌவுடன் விளையாடவிருக்கிறது.

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்சி மீதான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரோஹித் சர்மா ரசிகர்கள் ஹார்திக் பாண்டியாவை கிண்டல் செய்யும் சம்பவங்களும் நடந்தேறின.

கம்பீர் போன்ற சிலர் மட்டுமே பாண்டியாவுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குழந்தைகளுக்காக ‘மும்பை இந்தியன்ஸ் கிட்ஸ்’ என்ற புதிய யூடியூப் பக்கத்தை திறந்துள்ளது. அதில் புதிய அனிமேஷன் தொடரை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ’மைட்டி இந்தியன்ஸ்’ என்ற டிரைலரையும் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *