புஷ்பா – 2 திரைப்படத்தின் பீலிங்ஸ் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா – 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தெலங்கானா உள்ளிட்ட சில பகுதிகளில் டிச. 4 ஆம் தேதி இரவு 9.30 மணியிலிருந்து திரையிடப்படுகிறது.
கிட்டத்தட்ட 12,000 திரைகளில் வெளியாகும் படமென்பதால் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: புஷ்பா- 2 ஒரு டிக்கெட் விலை ரூ. 3,000!
தற்போது, படத்தில் இடம்பெற்ற பீலிங்ஸ் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் இப்பாடலின் தமிழ் வரிகளை விவேகா எழுத செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
