Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

கோவை: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்து சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற காவல் விதித்துள்ளனர். பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காவல் நீட்டித்துள்ளனர். ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவல்துறையினர் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக கோவையை சேர்ந்த காவலர் சுகன்யா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த 4ம் தேதி தேனி அருகே பழனி செட்டிப்பட்டி யில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். அத்துடன் அவரது காரில் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோவை அழைத்துவரப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்த கோவை சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் காவல் முடிந்ததும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி கோவை ஜே.எம்.4 நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *