Sorting by

×

வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு தவெக தலைவர் விஜய் தனது தொகுதியான பெரம்பூரில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறார்.

பிரசாரத்தில் பேசிய விஜய், “தாய் வீட்டில் இருந்து பரப்புரையைத் தொடங்குகிறேன். எனக்கு பிடித்த இடம் பெரம்பூர். தமிழ்நாட்டை இந்த நிலைமைக்குக் கொண்டுவர தீயசக்தி திமுகதான் காரணம்.

டாஸ்மார்கில் மட்டுமே ரூ. 1000 கோடி ஊழல் செய்திருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு இல்லாத போதைப்பொருள் அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்றியாக வேண்டும்.

தவெக விஜய்
தவெக விஜய்

இது நாடா? இல்ல காடா? போலீஸ் என்ற ஒன்று இங்கு இருக்கிறதா? இல்லையா? உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்காத ஸ்டாலின் அரசைத் தூக்கி வீசிடுவோமா? பல இடங்களில் அடிப்படை வசதி கூட இல்ல.

தீய சக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ளதா? ஸ்டாலின் சாருக்கு மக்களைப் பற்றி கவலையே இல்லை. இந்த 5 வருடத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளை அடிப்பதுதான் முக்கியம்.

வண்டி வண்டியாக வைத்து இருக்கும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இப்போது உங்களுக்குக் கொடுத்து எப்படியாவது ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்கள். இந்த அரசுக்கு வேட்டு வைக்கணும் வைப்பீர்கள் தானே? GEN Z கிட்ஸ்க்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.

தவெக விஜய்
தவெக விஜய்

ஏப்ரல் 23 ஆம் தேதி காலையில் எழுந்து பக்காவாகக் கிளம்பி உங்கள் ஓட்டர் ஐடியை எடுத்துக்கொண்டு பூத்திற்குச் சென்று விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள்.

இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கை இருந்தலும் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன்.

எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காகவே மட்டுமே வந்திருக்கிறேன். உங்கள் பிள்ளையான எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்!” என்று பேசியிருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *