Sorting by

×

மும்பை: நடந்து வரும் மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை(மே 17) நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரேவும் பங்கேற்கிறார்.

2024 மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மக்களவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தில் தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் கூட்டத்தில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதாரவாக வாக்குகள் கோரி பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

பொதுக் கூட்டத்தில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை போக்குவரத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு தாதரில் உள்ள சிவாஜி பூங்காவை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரை வரவேற்கும் வகையில் பாஜகவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

2019 தேர்தலில் பாஜக 23 இடங்களைப் பெற்று மிகப்பெரிய கட்சியாகவும், சிவசேனா 18 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *