தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஜூலை 6 வரை நீட்டித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கடந்தாண்டு பிப். 26ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் தொடர்ந்து சிசோடியாவிடம் விசாரித்து வருகின்றது.
கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது!
மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக சிசோடியா இடைக்கால ஜாமீன் கோரிய மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், சிசோடியாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன்(மே 30) நிறைவடையும் நிலையில் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து சிசோடிவின் நீதிமன்றக் காவலை ஜூலை 6 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
