நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தின் லால்கஞ்சில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “மதச்சார்பின்மை என்ற போர்வையில், ஓட்டு வங்கி அரசியல் செய்து, இந்துக்களையும், முஸ்லிம்களையும் சண்டையிடச் செய்தீர்கள். அதன்மூலம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை இனவாதத் தீயில் எரிய விட்டீர்கள். இந்த மோடி அந்த உண்மையை அம்பலப்படுத்திவிட்டேன். நாட்டு மக்களுக்கு இப்போது புரிந்துவிட்டது. இந்தியா கூட்டணி முற்றிலும் இப்போது திருப்திப்படுத்தும் அரசியல் புதைகுழியில் மூழ்கிவிட்டது.
பிரதமர் மோடி
ராமர் கோயில் குறித்து சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்கள் தினமும் மலிவான கருத்துகளையே கூறி வருகின்றனர். அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் பணி தொடங்கியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன். நமது நாட்டில் நீண்ட காலமாக அகதிகளாக வாழ்ந்து வருபவர்கள் எல்லோரும், மதத்தின் அடிப்படையில் இந்தியாவைப் பிரித்ததால் பாதிக்கப்பட்டவர்கள். ஸ்ரீநகர் மக்கள் வாக்குப்பதிவில் காட்டிய உற்சாகம், சட்டப்பிரிவு 370-ஐ யாராலும் திரும்பப் பெற்று வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்த்தியிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
தீவிரம் காட்டும் மோடி & கோ; கூட்டணி நம்பிக்கையில் `I.N.D.I.A’ – உச்சகட்டத்தில் உ.பி அரசியல் களம்
