மதுரை: நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்தில், யூடியூபரான டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டார். அவரிடம் 3 நாட்களுக்குள் செல்போனை ஒப்படைக்கும்படி காவல்துறை நோட்டீஸ் வழங்கியது.
சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கிய அவர், அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
