புதிய நீதிக் கட்சி சார்பாக வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறார் இயக்குநர் சுந்தர்.சி.
இது குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…
“2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குநர் நடிகர் சுந்தர் சி அவர்கள் சன் ஆஃப் சிதம்பரம் பிள்ளை வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.
30.3.2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாவது வேட்பாளரை சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம் இடம் நேரம் விரைவில் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்”.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
