Sorting by

×

மதுரை மாவட்டத்தில் தி.மு.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஒரு கால கட்டத்தில் கோலோச்சி வந்தார். அவருடன் வலது கரமாக இருந்தவர் தான் பி.எம்.மன்னன்.

கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னையால் 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரியை முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக இருந்தவருமான மு.கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கினார். அதன் பின் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

மு.க.அழகிரி, தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும், அவருடனே நிழலாக இருந்தவர் மன்னன்.

கடந்த வாரம் பி.எம்.மன்னன் அ.தி.மு.க-வில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று பி.எம்.மன்னன் அவரது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

மு.க.அழகிரியுடன் பி.எம்.மன்னன்

தி.மு.க-வில் இணைவதற்காக காத்திருந்தும் தலைமையிடமிருந்து கீரின் சிக்னல் எதுவும் வராததால், அ.தி.மு.க-வில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *