நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் மே 20-ம் தேதி ஐந்தாவது கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் இருந்த போதிலும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
மம்தா பானர்ஜி
அதனால், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகளுடன் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிவோம் என அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். நான்கு கட்ட வாக்குபதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், நேற்றைய தேர்தல் பிரசாரத்தின்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால் திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இருக்காது. ஆனால், கூட்டாளியாக வெளியில் இருந்து ஆட்சியமைக்க ஆதரவளிப்போம். மசோதாக்களில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்போம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, “மேற்கு வங்கத்தில் கூட்டணியை உடைத்த மம்தாவை என்னால் நம்பமுடியவில்லை. மேற்கு வங்க முதல்வர் ஏற்கனவே என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறார். ஒருவேளை தேர்தல் முடிவு அவர்களுக்கு சாதகமாக இருந்தால், அவர் அங்கு சென்றுவிடுவார். இந்தியா கூட்டணியில் விரிசல் விழ மம்தா பானர்ஜிதான் காரணம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
தீவிரம் காட்டும் மோடி & கோ; கூட்டணி நம்பிக்கையில் `I.N.D.I.A’ – உச்சகட்டத்தில் உ.பி அரசியல் களம்
