சென்னை: சென்னை துறைமுகம் மிகப் பெரிய ஆழம் கொண்ட சரக்கு கப்பலை கையாண்டு சாதனை படைத்துள்ளது. சென்னை துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு பெரிய சரக்கு கப்பல்கள் வந்து செல்வது உண்டு. அந்த வகையில், தற்போது வெளிநாட்டில் இருந்து மிகப் பெரிய ஆழம் கொண்ட சரக்கு கப்பல் கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் வந்துள்ளது.
‘ஏபிஎல் பாஸ்டன்’ என்ற அந்த சரக்கு கப்பல் 1.09 லட்சம் டன் எடையும், 328.2 மீட்டர் நீளமும், 14.9 மீட்டர் ஆழமும் கொண்டது. மேலும், இந்தக் கப்பலில் 9,326 டன் எடையுள்ள சரக்குகள் கன்டெய்னர் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
