Sorting by

×

முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது,

கிளாம்பாக்கத்தில் இருந்து மே 17 ஆம் தேதி 555 பேருந்துகள், மே 18 ஆம் தேதி 645 பேருந்துகள், மே 19 ஆம் தேதி 280 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. கோயம்பேட்டிலிருந்து நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 3 நாள்களுக்கு 65 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

இதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை (மே. 19) சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு பயணிகள் திரும்ப வசதியாக தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *