Sorting by

×

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்களின் மூலம் தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாக்கவும், 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்குடன் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி என்.ஐ.டி. மாணவியிடம் அத்துமீறல்… மாணவர்கள் தொடர் போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ. 450 கோடி முதலீட்டில் நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்புகளும், கோயம்புத்தூரில் ரூ.150 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஈல்ட் என்ஜினீயரிங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் 300 வேலைவாய்ப்புகளும், சென்னையில் கீக்மைண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் 500 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் ரூ. 900 கோடிக்கும் அதிகமான முதலீடுகளில் 4,100 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளது.

30 வயதுக்கு முன்பும் 30 வயதுக்கு பின்பும்…! ஜோ ரூட்டின் ருத்ர தாண்டவம்!

நோக்கியா நிறுவனத்தில் ரூ. 450 கோடியில் 100 வேலை வாய்ப்புகளும், பேபால் நிறுவனத்தில் 1,000 வேலை வாய்ப்புகளும், மைக்ரோசிப் நிறுவனத்தில் ரூ. 250 கோடியில் 1,500 வேலைவாய்ப்புகளும், இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தில் ரூ. 50 கோடியில் 700 வேலைகளும், அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தில் 500 வேலைகளும் உருவாக்கப்படவுள்ளன.

இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், தொடர்ந்து தீவிரப்படுத்தி, அதிக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து, ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *