Sorting by

×

இந்தியாவில் கடந்த ஆண்டுடன், இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சாம்சங் நிறுவனம் தனது 2024ன் முதல் காலாண்டில் அதன் சந்தைப் பங்கில் 13 சதவிகிதத்தை இழந்துள்ளது. அதே நேரத்தில் ஆப்பிள் நிறுவனம் அதன் சந்தைப் பங்கை 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சர்வதேச தரவு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024ன் முதல் காலாண்டில், தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் 20.1 சதவிகிதத்தில் இருந்து 15.6 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஆப்பிள் ஐபோனின் பங்குகள் 6.8 சதவிகிதத்தில் இருந்து 7.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பங்கு வீதம் குறைந்தாலும் சாம்சங் 20.8 சதவிகிதத்துடன் தொடந்து முதலிடத்தில் இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆப்பிள் நிறுவனத்திடம் முதலிடத்தை பறிகொடுத்தது சாம்சங்.

இந்தியாவில், சீன மொபைல் தயாரிப்பாளரான விவோ, 16.2 சதவிகிதம் சந்தைப் பங்கைக் கொண்டு, சாம்சங் நிறுவனத்தை மாற்றியமைத்து, 2 ஆவது இடத்திற்கு வந்தது. மற்றொரு சீன மொபைல் தயாரிப்பாளரான ஜியோமி 12.8 சதவிகிதப் பங்குகளுடன் 3 ஆவது இடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் ஓப்போ, ரியல்மீ ஆகிய நிறுவனங்கள் 10.2 சதவிகிதம் மற்றும் 9.8 சதவிகித சந்தைப் பங்குகளுடன் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தைப் பங்கீட்டில் ஆப்பிள் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 34 மில்லியன் யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 11.5% வளர்ச்சி அடந்துள்ளது. இது தொடர்ச்சியான மூன்றாவது காலாண்டின் வளர்ச்சியாகும். முதல் 10 பிராண்டுகளில், மோட்டோரோலா மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டது. சாம்சங் புதிய மாடல் போன்களை வெளியிட்ட போதிலும் ஏற்றுமதி குறைந்து வருகிறது.

”ஆண்டின் முதல் சில மாதங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தைக்கு வேகத்தை அளித்துள்ளன. இருப்பினும், ஆண்டின் இரண்டாம் பாதி முக்கியமானதாக இருக்கும். இது சராசரியான ஒட்டுமொத்த வளர்ச்சியை மதிப்பிடுகிறது” என சர்வதேச தரவு நிறுவனத் துணைத் தலைவர் நவ்கேந்தர் சிங் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 23 மில்லியன் 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 46 சதவிகித்திலிருந்து 69 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், 5ஜி ஸ்மார்ட்போன்களின் சராசரி விற்பனை விலை 337 டாலராக குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *