நடிகைக்கு பணம் கொடுத்தது தொடா்பான விவரங்களை முறைகேடாக மறைத்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளது.
2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் தன்னைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக நடிகைக்கு 1.3 லட்சம் டாலா் (சுமாா் ரூ.109 கோடி) அளித்த விவகாரத்தில் அமெரிக்கா முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக நியூயாா்க் நீதிமன்றத்தில் குற்றவியல் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக நிறுவனக் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்த நாட்டின் அதிபராக இருந்த ஒருவா் மீது குற்றவியல் விசாரணை நடைபெறுவது இதுவே முதல்முறை.
இந்த நிலையில், வழக்கின் பல கட்ட விசாரணைக்கு பின், டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த ஒருவா் மீது குற்றவியல் வழக்கில் தண்டனை பெறுவது வரலாற்றில் இதுவே முதல்முறை.
இதையடுத்து, இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையின் போது வழங்கப்படும் என்று நியூயாா்க் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிரம்புக்கு சிறை தண்டனை விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
