நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ல் நடைபெற்று முடிந்த அடுத்த நாளே, ராஜஸ்தான் பா.ஜ.க பேரணியில் மோடி, `நாட்டின் சொத்துகளைப் பறித்து ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளை பெற்றுகொண்டுள்ளவர்களுக்கும் காங்கிரஸ் கொடுக்கும். காங்கிரஸின் இந்த சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது’ என இஸ்லாமியர்களை முன்வைத்துப் பேசியிருந்தார்.
மோடி
அதற்கடுத்த இரண்டாவது நாளில் உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அலிகாரில், `இஸ்லாமிய தாய்மார்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றியிருக்கிறோம்’ என மோடி பிரசாரம் செய்தார். பின்னர் அடுத்தடுத்த பிரசாரங்களில், `எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கொடுக்கப்போகிறது. என் உயிருள்ளவரை அதற்கு அனுமதிக்கமாட்டேன்’ என மோடி தொடர்ச்சியாகக் கூறிவந்தார்.
மோடியின் இத்தகையப் பேச்சைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பா.ஜ.க தலைவர்கள் பலரும் இதே தொனியில் பிரசாரம் மேற்கொண்டனர். இத்தகைய சூழலில், வாரணாசியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த மோடி, தனியார் ஊடகத்துடனான பேட்டியொன்றில், “அதிக குழந்தைகளைப் பற்றி பேசும்போதெல்லாம் அவர்கள் முஸ்லிம்கள் என்று யார் உங்களுக்கு கூறியது… ஏன் நீங்கள் முஸ்லிம்களுக்கு இப்படி அநியாயம் செய்கிறீர்கள்.
பிரதமர் மோடி – சரத் பவார்
ஒருவர் எத்தனைக் குழந்தைகளைக் கவனிக்க முடியுமோ அத்தனைக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் நான் கூறினேன். உங்கள் குழந்தைகளை அரசாங்கம் கவனித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விடாதீர்கள். மேலும், என்று நான் இந்து-முஸ்லிம் என அரசியல் செய்கிறேனோ அன்றே என்னுடைய பொதுவாழ்க்கைக்கான தகுதியை நான் இழந்துவிடுவேன். எனவே ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டேன். அதுவே என் உறுதிமொழி” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மோடியின் அரசியல் பயணம் முஸ்லிம் எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதுதான் என AIMIM கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி சாடியிருக்கிறார்.
இது குறித்து ஒவைசி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “மோடி தனது உரையில் முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைக் கொண்டவர்கள் என்றும் கூறினார். இப்போது முஸ்லிம்களைப் பற்றி அவ்வாறு பேசவே இல்லை என்றும், இந்து-முஸ்லிம் கோணத்தையே பயன்படுத்தியதில்லை என்றும் கூறுகிறார்.
அசாதுதீன் ஒவைசி
இப்படியான தவறான விளக்கத்தைக் கொடுக்க ஏன் இவ்வளவு நேரம்… மோடியின் அரசியல் பயணம் என்பது முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தேர்தலில் மோடியும், பா.ஜ.க-வும் முஸ்லிம்கள் மீது எண்ணற்ற பொய்களையும், மிகப்பெரிய வெறுப்பையும் பரப்பியிருக்கின்றனர். இதிலிருப்பது மோடி மட்டுமல்ல, இத்தகைய பேச்சுக்களையும் மீறி பா.ஜ.க-வுக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளரும்தான்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
`பிரசாரத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தும் வார்த்தைகள்..!’ – லாலு குற்றச்சாட்டும் பின்னணியும்!
