எதிர்க்கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி [சிபிஐ(எம்)] மற்றும் ஜி.தேவராஜன் (ஏஐஎஃப்பி), அகில இந்திய வானொலி (ஏஐர்) மற்றும் தூர்தர்ஷனில் (டிடி) ஆற்றிய உரைகளிலிருந்து ’முஸ்லிம்கள்’ மற்றும் ’வகுப்புவாத மற்றும் சர்வாதிகார ஆட்சி’ என்கிற வார்த்தைகளை நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் [சிபிஐ(எம்)] பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தூர்தர்ஷனில் தனது தொலைக்காட்சி உரையின் போது இரண்டு சொற்களையும் நீக்கி, நிர்வாகத்தின் “திவால்நிலை” என்ற வார்த்தையை “தோல்வி” என்று மாற்ற வேண்டியிருந்த நிலையில், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் (ஏஐஎஃப்பி) தலைவர் ஜி. தேவராஜன் கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்ட தனது உரையில், “முஸ்லிம்கள்” என்ற வார்த்தையைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர், தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி இரண்டும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய ’நடத்தை விதிகளை’ பின்பற்றுவதாகக் கூறினார்.
”மற்ற நாடுகளை விமர்சிப்பது, மதங்கள் அல்லது சமூகங்கள் மீதான தாக்குதல், வன்முறையைத் தூண்டுவது அல்லது நீதிமன்ற அவமதிப்பு, நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் உரைகள் முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும்” என்று தேர்தல் விதிகளின் வழிகாட்டுதலின்படி தூர்தர்ஷன் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளது.
”தேவராஜன், முஸ்லிம்களுக்குப் பதிலாக ‘குறிப்பிட்ட சமூகம்’ என்ற சொற்றொடரை பயன்படுத்த வேண்டியிருந்தது.
சீதாராம் யெச்சூரி, நிர்வாகத்தின் ‘திவால்’ என்ற வார்த்தையை நீக்கி, அதற்குப் பதிலாக ‘தோல்வி’ என்று மாற்றுவதற்கான பரிந்துரை செய்தார், இது அரசாங்கத்தின் சர்வாதிகாரத் தன்மையை மட்டுமே ஆதரிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
பரிந்துரைக்கப்பட்ட நீக்குதல்களை மறுபரிசீலனை செய்யுமாறு தூர்தர்ஷன் டிஜி-க்கு யெச்சூரி விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
