ஆளுநர் மாளிகை என்ன சொல்கிறது?
ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை கூறியுள்ளதாவது….
“ஆளுநரின் மைக் தொடர்ந்து ஆஃப் செய்யப்பட்டது. அவர் பேச அனுமதிக்கப்படவில்லை.
ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான பல தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன”.
Reasons why Governor declined reading the Govt speech in the Assembly:
1- Governor’s Mike was repeatedly switched off and he was not allowed to speak;
2- The speech contains numerous unsubstantiated claims and misleading statements. Several crucial issues troubling the people… pic.twitter.com/EebC7wDJHg
— LOK BHAVAN, TAMIL NADU (@lokbhavan_tn) January 20, 2026
ஆர்.என்.ரவி ஏன் வெளியேறினார்?
தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஆர்.என்.ரவி கேட்டுள்ளார். ஆனால், மரபுப்படி, தமிழ்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியதால், ஆளுநர் வெளியேறியுள்ளார்.

ஆளுநர் வெளியேறினார்
தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
கூட்டத்தொடர் தொடங்கியது!
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வந்திருக்கின்றனர்.
இன்று தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது.
ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில், இதுவரை ஒரு ஆண்டு கூட, அவர் ஆளுநர் உரையை முழுமையாகப் படித்ததில்லை.
இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இன்று ஆர்.என்.ரவி என்ன செய்யப்போகிறார் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


