கூடலூர்: வனத்துறை வெளியிட்ட யானைகள் வழித்தடம் குறித்த புதிய வரைவுப் பட்டியலை எதிர்த்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் யானைகள்‌ வழித்தடம் தொடர்பான புதிய அறிவிப்பால் கூடலூர்‌, ஓவேலி, முதுமலை ஆகிய வனச்சரக அலுவலகங்களுக்கு‌ உட்பட்ட 31 கிராமங்களில் ‌2,547 வீடுகள் பாதிக்கப்படும் அபாயம்‌ ஏற்பட்டுள்ளது. 7 வருவாய்‌ கிராமங்களில் ‌34,796 வீடுகள் ‌யானை வழித்தடத்தில்‌ உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, நெலாக்கோட்டை, சேரங்கோடு, நெல்லியாளம்‌ நகராட்சி, மசினகுடி ஆகிய உள்ளாட்சிப் பகுதிகளில்‌ உள்ள மக்கள் பெரிதும்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
