Sorting by

×

சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு யூடியூப் சேனல் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர்கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது சென்னை போலீஸாரும் அடுத்தடுத்து 7 வழக்குகளைப் பதிந்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், தேனி போலீஸார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் பதிந்தனர். இந்தவழக்கு தொடர்பாக சென்னைமதுரவாயலில் உள்ள அவரது வீடு, தி.நகரில் உள்ள அவரதுஅலுவலகத்திலும் சோதனைநடைபெற்றது.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *