ராஜபாளையம்: ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசியில் நேற்று மாலை 2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. சிவகாசியில் கடந்த வாரம் இடி, மின்னலுடன் பெய்த மழையில் மின்னல் பாய்ந்து சிறுவன் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்தார். கடந்த ஒரு வாரமாக காலையில் கடும் வெயிலும், மாலையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்து வந்தது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
