Sorting by

×

ராஜமௌலி இயக்கிய ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இது மகேஷ் பாபுவின் 29ஆவது படம் எனக் கூறப்பட்டு வந்தது.

இந்தப் படம் அயன் பாணியில் உலகம் முழுக்க சுற்றும் இளைஞனின் கதை என முதலில் கூறப்பட்டது. பின்னர், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜமௌலி – மகேஷ் பாபு படம் உருவாகவுள்ளதாக ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்திருந்தார்.

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக நவீன தொழில்நுடப்பத்தில் ரூ.1000 கோடி பட்ஜெட்டில்  எடுக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இதனை மறுத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் தயாரிப்பு நிறுவனர் விரேன் ஸ்வாமிக்கு இந்தப் படத்துடன் எந்த விதத்துலும் சம்பந்தப்படவில்லை எனவும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளிடப்படுமெனவும் தெரிவித்துள்ளது.

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *