நடிகர் தனுஷ் தனது 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘ராயன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முன்னதாக, இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ராயன் படத்திற்கான பின்னணி இசையை முடித்துள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார். ராயன் ஜூன் – 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
