Sorting by

×

தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல துறைகளில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர் நடிகர் தனுஷ். 2016-ல் அவரது இயக்கத்தில் வெளியான பா. பாண்டி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த வெற்றிக்குப்பின் கிட்டத்தட்ட 8 வருடங்கள் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய தனுஷ், தற்போது மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். தனது 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு “ராயன்” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

அந்தமானில் சூர்யா – 44 படப்பிடிப்பு?

இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் ஜூன் – 13 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்வை வருகிற ஜூன் 1 ஆம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் மீது தனுஷ் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *