அ.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின், நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில், அவர் தனது வேட்புமனுவில் இணைத்துள்ள பிரமாணப் பத்திரத்தின் மூலம் அவரின் சொத்து கணக்கு விவரம் வெளியாகி உள்ளது. பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவிதான் லீமா ரோஸ். அவரது குடும்பத்தினர், வெவ்வேறு கட்சிகளில் உள்ளனர். அ.தி.மு.க-வில் சமீபத்தில் சேர்ந்த மார்ட்டின் மனைவி லீமா ரோஸ், திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், லீமா ரோஸ் நேற்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், இணைத்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தமிழநாட்டிலேயே அதிக சொத்து மதிப்புடைய வேட்பாளராக அவர் இருக்கிறார். வேட்பாளர் பெயரில், 139 கோடி ரூபாய் மதிப்புக்கு நகை உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. அவர் கணவர் பெயரில் 3,262 கோடி ரூபாய் மதிப்புக்கு நகை உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. அதேபோல், வேட்பாளர் பெயரில் 909 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள் உள்ளன.

அவர் கணவர் மார்ட்டின் பெயரில் 887 கோடி ரூபாய் மதிப்புக்கு கட்டடங்கள், நிலம் ஆகியவை உள்ளன. இது தவிர, அவர் மகன் ஜோஸ் டைசன் என்பவர் பெயரிலும் ரூ. 662 கோடி மதிப்புக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. மொத்தத்தில், லால்குடி வேட்பாளர் லீமா ரோஸ் பெயரில் அசையும், அசையா என ரூ.1048 கோடி சொத்து மதிப்பும், அவர் கணவர் மார்ட்டின் பெயரில் அசையும், அசையா என ரூ.4149 கோடி சொத்து மதிப்பும், மகன் பெயரில் ரூ.662 கோடி என மொத்தம் அவரது குடும்ப சொத்தாக கிட்டத்தட்ட 6000 கோடி ரூபாய் உள்ளதாக தெரிவித்து உள்ளார். அப்படி, அவர் தாக்கல் செய்துள்ள சொத்து கணக்கு விவரங்களின்படி தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தான் என்பது தெரியவந்துள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
