Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. மாநில பொருளாளர் சேகருக்கு இன்று சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்கு மூலம் அளித்தனர். அதைதொடர்ந்து, இந்த வழக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.
ரூ.4 கோடி வழக்கில் சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஓட்டுனர் பெருமாள், நயினார் உறவினர் முருகன் உள்ளிட்டோரிடம் விசாரணை முடிந்துள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. மாநில பொருளாளர் சேகருக்கு இன்று சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். பா.ஜ.க. நிர்வாகி முரளிக்கும் சிபிசிஐடி இன்று சம்மன் அனுப்ப உள்ளது. இதனால் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால், அவர் மீதான சிபிசிஐடியின் பிடி இறுகி வருவது உறுதியாகியுள்ளது.
The post ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. மாநில பொருளாளர் சேகருக்கு இன்று சம்மன் அனுப்ப முடிவு appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *