சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரெட்ரோ திரைப்படம் ஆக்ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
Grand Audio and Trailer launch of #Retro on 18th April at Nehru Indoor Stadium, 5 PM onwards✨#TheOne#RetroFromMay1 #LoveLaughterWar pic.twitter.com/I67drCBDLw
— karthik subbaraj (@karthiksubbaraj) April 16, 2025
மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகளைப் படக்குழு வெளியிட்டு வருகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கண்ணாடி பூவே, கனிமா, தி ஒன் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில், ரெட்ரோ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏப். 18 ஆம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: சுந்தர். சி இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி?!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI