நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படமான ‘லவ் மேரேஜ்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கியுள்ள புதிய படம் ‘லவ் மேரேஜ்’.
இதில், நாயகியாக சுஷ்மிதா பட் நடிக்கிறார். மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
கோபிச்செட்டிபாளையத்தை கதைக்களமாக கொண்ட இப்படம் 30 வயதிற்கு மேல் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் நாயகன் பற்றியும், திருமணத்தால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றியும் பேசியுள்ளதாக இயக்குநர் தெரிவித்தார்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘கல்யாண கலவரம்’ இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை ஷான் ரோல்டனே எழுதிப் பாடியுள்ளார்.
லவ் மேரேஜ் திரைப்படம் வருகிற மே மாதம் வெளியாகவுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI