வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் மூன்று இந்திய வீரர்கள் அறிமுக வீரர்களாக அணியில் களமிறங்கவுள்ளனர்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வரும் நிலையில், டி20 தொடர் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
ஐபிஎல் தொடர் 2025-27 ஆம் ஆண்டுக்கான வீரர்களுக்கான விதிமுறைகள் வெளியீடு!
3 புதுமுகங்கள்
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கு சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (செப்டம்பர் 28) அறிவித்தது. டி20 தொடருக்கான இந்திய அணியில் மூவர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் இவர் பந்துவீசுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல ஹர்ஷித் ராணா மற்றும் 21 வயதாகும் ஆல்ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோரும் அணியில் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி!
டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்
சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சா்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, ரியான் பராக், நிதீஷ்குமாா் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தா், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவா்த்தி, ஜித்தேஷ் சா்மா (விக்கெட் கீப்பர்), அா்ஷ்தீப் சிங், ஹா்ஷித் ராணா மற்றும் மயங்க் யாதவ்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
