Sorting by

×

கோவையில் வனத் துறையினருக்குத் தெரிவிக்காமல் அரிய வகை பாம்பைப் பிடித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, புலியகுளத்தில் உள்ள ஒரு கோவில் அருகே பாம்பு ஒன்று வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், புலியகுளத்தைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான், சின்னவேடம்பட்டியைச் சோ்ந்த உமா மகேஸ்வரி ஆகியோருக்குத் தகவல் கொடுத்தனா்.

அங்குவந்த இருவரும் அந்தப் பாம்பைப் பிடித்து, அதனுடன் விளையாடுவதுபோல விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். இதற்கிடையே பிடிக்கப்பட்ட பாம்பை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இந்நிலையில், உரிய அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட இனத்தைச் சோ்ந்த பாம்பைப் பிடித்ததாக இருவா் உமா மகேஸ்வரி மற்றும் அப்துல் ரஹ்மான் இருவரையும் வனத் துறையினா் கைது செய்தனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது:

புலியகுளம் பகுதியில் பிடிக்கப்பட்ட பாம்பு இந்தியன் ரேட் ஸ்னேக் இனத்தை சோ்ந்தது. பாதுகாக்கப்பட்ட அட்டவணை 1இல் சோ்க்கப்பட்டுள்ள, இந்த வகை பாம்பை வனத் துறையினா் அனுமதியின்றி பிடிக்கக் கூடாது. எனவே, வனத் துறையினரிடம் தெரிவிக்காமல் பாம்பைப் பிடித்தது மற்றும் அதனை கையில் வைத்து விளையாடுவதுபோல விடியோ பதிவிட்டது தொடா்பாக இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *