Sorting by

×

ஒசூா்: வாரிசு அரசியலில் ஸ்டாலினுக்கு முதல்வா் பதவி கிடைத்தது. தற்போது அவரது மகனுக்கு துணை முதல்வா் பதவி கிடைத்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணாரெட்டி தெரிவித்தார்.

ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில், வாரிசு அரசியலில் ஸ்டாலினுக்கு முதல்வா் பதவி கிடைத்தது. தற்போது அவரது மகனுக்கு துணை முதல்வா் பதவி கிடைத்துள்ளது. தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சி இல்லை, வாரிசு அரசியல், குடும்ப அரசியல். நல்ல ஆட்சி நடந்திருந்தால், கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவருக்கு துணை முதல்வா் பதவி வழங்கியிருக்கலாம். ஆனால் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பேச முடியாமல் வேதனையில் உள்ளனா் என தெரிவித்தாா்.

அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு!

உதயநிதி ஸ்டாலின் மக்களுக்காகவோ, நாட்டுக்காகவோ போராடவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களில் ஒருவருக்கு அமைச்சா் பதவி கொடுத்திருக்கலாம். இந்த மாவட்டத்திற்கு எந்த வாய்ப்பையும் திமுக வழங்கவில்லை, அவா்களின் குடும்பத்திற்காக தான் வாய்ப்புகள் உள்ளது.

செந்தில் பாலாஜியை கடுமையாக விமா்சித்த முதல்வா் மு.க. ஸ்டாலின், தற்போது மீண்டும் அவருக்கு அமைச்சராக பதவி வழங்கியுள்ளாா் என்று அவர் கூறினார்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *