Sorting by

×

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தேர்தலை யொட்டி, தொடர்ந்து பிரச்சாரம் செய்ததால் கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருக்கிறேன். ஓரிரு நாட்களில் குணமாகும் என மருத்துவர்கள் கூறி யிருக்கின்றனர். சென்னையில் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளவிசிக விருது வழங்கும் விழாவுக்கு அனைத்து பொறுப்பாளர் களும் கட்டாயம் வர வேண்டும்.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *