அறிவாலயத்தில் திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது விஜய் குறித்த அவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் பேசியதாவது, ‘திமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகள் இந்த மஜக. நேச முரண்பாடுகள் இருந்தாலும் தமிழ்நாட்டை பாதுகாக்கக் கூடிய கட்சியாக திமுகவை கருதி ஆதரவு தெரிவிக்கிறோம்.
பேச்சுவார்த்தைக் குழு கண்ணியமாக நடத்தினார்கள். பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக முடிந்தது. எங்களின் எதிர்பார்ப்பை கேட்டுவிட்டு நல்ல செய்தி வரும் என்று கூறி அனுப்பிய அனுப்பியிருக்கிறார்கள். ஒரு உத்தேச விருப்பப்பட்டியலை கொடுத்திருக்கிறோம்.
திமுகவை நோக்கி வரும் புதிய கட்சிகளை ஏற்கிறோம். முதல்வர் கடந்த கால வேறுபாடுகளையெல்லாம் மறந்து பெருந்தன்மையாக நடந்துகொள்கிறார்.

திமுக கூட்டணி 200 தொகுதிகளிலும் வெல்லும். மீதமிருக்கும் 34 தொகுதிகளில் கூட எதிர்க்கட்சிகள் வெல்வது கடினம். திமுக vs தவெக என விஜய் சொன்ன கருத்து நேற்று மாலை 5 மணியோடு முடிந்தது. என்னவென்று உங்களுக்கே புரியும்’ என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
