Sorting by

×

அதிமுக கூட்டணியிலுள்ள புதிய நீதிகட்சி சார்பாக மதுரை மத்திய தொகுதி வேட்பளாராக இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக இன்று மதுரைக்கு வந்திருந்த சுந்தர்.சி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில், “என்னுடைய மூத்த சகோரர்  ஏ.சி. சண்முகம் என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நான் பெரிய வெற்றியை கொடுக்கவேண்டும் என நினைக்கிறேன்.

மதுரை மத்திய தொகுதி மக்கள் எனக்கு வெற்றி கனியை தருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இனிமேல் மாதத்தில் 15 நாட்கள் மதுரை மத்திய தொகுதியில் தான் இருப்பேன் என உறுதிபட கூறுகிறேன். கடந்த 30 வருடங்களாக திரைப்பட துறையில் பணியாற்றி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளேன். இந்த தேர்தல் முடிவை வைத்து தான் என்னுடைய அடுத்த கட்ட நகர்வு இருக்கும்.

சுந்தர் சி
சுந்தர் சி

கடந்த 30 வருடங்களாக திரைப்பட துறையில் பணியாற்றி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளேன். இந்த தேர்தல் முடிவை வைத்து தான் என்னுடைய அடுத்த கட்ட நகர்வு இருக்கும். விஜய் என் மீது பெரிதும் அன்பும், மதிப்பும் கொண்டவர், அதே மாதிரி தான் நானும், என்னுடைய மனைவி குஷ்பு அவரை தம்பியாக கருதுகிறார், அவரும் அக்கா என அழைப்பார்.  அதனால் விஜயை பற்றியோ அவருடைய வேட்பாளரை பற்றியே பேச மாட்டேன். மதுரை மத்திய தொகுதியை பொறுத்தவரை திமுகவிற்கும், அதிமுகவிற்கும்தான் போட்டி” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *