தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. திமுக Vs அதிமுக என்றிருந்த தமிழக அரசியல் களம், இந்த முறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டியாக மாறியுள்ளது.
திமுக அதிமுக இரண்டு கட்சிகள் மீதும் தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் வைக்கிறார். பதிலுக்கு விஜய் மீது அதிமுகவினரும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் நடைபெற்ற அதிமுக நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும்போது, “புதிதாக சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். யார் வேண்டுமானால் கட்சி தொடங்கலாம்.

விஜய்யை பார்ப்பதற்காக அவரின் கட்சியினர் ஏராளமானோர் கரூர் வந்தனர். விஜய் கண் முன்னரே 41 மக்கள் கொத்து கொத்தாக விழுந்து இறந்தனர். விஜய் எதுவும் செய்யாமல் சென்னை ஓடினார். இப்போது வரை கரூர் செல்லவில்லை.
அதிமுகவில் சாதாரண ஒரு தொண்டருக்கு அடிபட்டால் கூட உடனடியாக சென்று பார்க்கிறோம். கரூரில் இருந்து சென்னை ஓடிய விஜய் ஒரு மாதம் தன்னுடைய வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. அவரை ஆதரிக்கலாமா. விஜய் எனக்கு நண்பர்தான். ஆனால் இது சினிமா இல்லை.
சினிமாவில் கேமரா முன்பு நடித்து செல்வது போல, விஜய் கரூர் சம்பவத்தையும் அணுகியுள்ளார் அவருக்கு வாக்களித்து திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்து விட வேண்டாம்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
