Sorting by

×

சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு பரபரப்பாகி வருகிறது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்து, தொகுதிக்குச் சென்று பிரசாரத்தையும் வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர்.

த.வெ.க சார்பில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று காலை முதல் அவரின் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக அதிகாலை முதலே வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்கிறார்கள்.

 விஜய்
விஜய்

கடந்த 10, 15 ஆண்டுகளாக தொகுதியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் இருப்பதை உணர முடிகிறது. ‘விஜய் அண்ணன் ஆட்சிக்கு வர வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஆழமாக உள்ளது.

சென்னை மட்டுமன்றி, தமிழ்நாடு முழுவதும் தலைவர் அறிவித்த வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

நேற்று பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கலை முடித்துவிட்டு, கொளத்தூர் தொகுதி வழியாக தலைவர் பிரசாரத்திற்கு வந்தபோது, மக்கள் திரண்டு வந்தனர். இது கட்சியினரால் திட்டமிட்டு கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. தலைவரைப் பார்க்க மக்கள் தானாகவே முன்வந்து திரண்ட எழுச்சி அலை. ஆனால், ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இந்த மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ, பாதுகாப்பு வழங்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட அசாதாரணமான சூழல் காரணமாக, தலைவர் விஜய் திட்டமிட்டபடி வில்லிவாக்கம் தொகுதிக்கு வர இயலவில்லை. கொளத்தூரில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே, திட்டமிட்டு சில இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.

கரூர் மருத்துவமனை
கரூர் மருத்துவமனை

கரூரில் செந்தில் பாலாஜி முன்னெடுத்த சில நிகழ்வுகளால் எப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டதோ, அதேபோன்ற ஒரு நிலையை இங்கும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கரூரில் நடந்த சம்பவத்திற்குப் பயந்துதான் செந்தில் பாலாஜி இன்று கோயம்புத்தூர் தொகுதியில் தஞ்சம் புகுந்துள்ளார். அதே போன்றதொரு ஆபத்தான சூழல் கொளத்தூர் மக்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆளுங்கட்சியின் சதித்திட்டத்தை முன்கூட்டியே உணர்ந்ததால், மக்களின் பாதுகாப்பைக் கருதி எங்களது பிரசாரத்தை மிக விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

மிக விரைவில் வில்லிவாக்கத்தில் ஒரு பிரமாண்டமான பிரச்சாரத்தை மேற்கொண்டு உங்களை நேரில் சந்திப்பேன் என விஜய் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆளுங்கட்சியின் அடக்குமுறைகளைத் தாண்டி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் முதல் கடமை என்பதை இதன் மூலம் பதிவு செய்கிறோம்.

இன்று காலை ஒரு பேரதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. எந்தத் தவறும் செய்யாத எங்கள் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப்பதிவு (FIR) செய்துள்ளது. மக்கள் தன்னிச்சையாகத் திரண்டு வருவதைத் தடுக்க முடியாது என்று தெரிந்தே, பொறாமையின் காரணமாகவும், பயத்தின் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

26 கட்சிகள் கூட்டணி, பணபலம், 75 ஆண்டுக்காலப் பாரம்பர்யம் எனப் பெருமை பேசும் தி.மு.க, ஒரு புதிய கட்சியின் எழுச்சியைக் கண்டு இவ்வளவு பயப்படுவது ஏன்?

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை முடக்க நினைத்த அதே பாணியை இன்று விஜய் மீதும் தி.மு.க கையாள்கிறது. அமைச்சர்கள் நேரு, சேகர் பாபு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான ஊழல் புகார்கள் மற்றும் அந்தப் பணம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குச் சென்றது பற்றிய உண்மைகளை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்வோம்.

தமிழக காவல்துறை இன்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடிச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும், காவல்துறையின் உயர் அதிகாரிகள் ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகள் போலச் செயல்படுகிறார்கள். சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளை மாற்றாதவரை நியாயமான தேர்தல் நடக்காது. இது குறித்து தேர்தல் ஆணையர் அர்ச்சனா மீனா அவர்களிடம் நாங்கள் புகார் அளிப்போம்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *