வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் வரும் 23-ம் தேதி, த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்துவதற்காகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான அனுமதி கோரி, த.வெ.க நிர்வாகிகள் வேலூர் மாவட்ட எஸ்.பி சிவராமனிடம் மனு அளித்திருக்கின்றனர். இதையடுத்து, கூட்டம் நடக்கவிருக்கும் இடத்தையும் நேரில் பார்வையிட்டிருக்கிறார் எஸ்.பி சிவராமன்.
அனுமதி வழங்கும் முன்பு 20 நிபந்தனைகளையும் கடைப்பிடிக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை திறந்தவெளி மைதானத்தில் பந்தல், நாற்காலிகள் போடாமலேயே விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதனால், விபரீத நிகழ்வுகளும் அரங்கேறின.

எனவே, த.வெ.க தொண்டர்களும், பொதுமக்களும் வெயிலில் நிற்காமல் இருக்கவும், விபரீதங்களைத் தவிர்க்கவும் முதன்முறையாக வேலூர் கூட்டத்தில் நாற்காலிகள் வசதியுடன் பந்தல் அமைக்கப்படவிருக்கிறது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள்ளாக கூட்டத்தை நடத்தி முடிக்கவும் போலீஸார் அறிவுறுத்தியிருக்கின்றனர். இதற்காக, 33 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு சமன் செய்யப்பட்டிருக்கிறது. வாகனங்களை பார்க்கிங் செய்யவும் தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதையொட்டி, இன்று காலை சிறப்புப் பூஜைகளுடன் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், த.வெ.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
