Sorting by

×

விஜய் – 69 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. இப்படம் உலகளவில் ரூ. 430 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தொடர்ந்து, ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசி திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்க அனிருத் இசையமைக்கிறார். 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படம் விவசாயப் பிரச்னையைப் பேசும் அரசியல் கதையாக உருவாகவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஓய்வை அறிவிப்பீர்களா? கரண் ஜோஹர் கேள்விக்கு ஷாருக்கான் பதில்!

விஜய் அரசியலுக்கு வந்தததைத் தொடர்ந்து விழுப்புரத்தில் தன் முதல் மாநாட்டை நடத்தவுள்ளார். மாநாடு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *