Sorting by

×

மலையாள சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர் மாத்யூ தாமஸ். தண்ணீர்மதன் தினங்கள், கும்பளாங்கி நைட்ஸ், ஜோ அண்ட் ஜோ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர்.

லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகனாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான பிரேமலு திரைப்படத்திலும் சில காட்சிகளில் வந்தார்.

இந்த நிலையில், நேற்று (மே.15) அதிகாலை மாத்யூ தாமஸின் குடும்பத்தினர் காரில் சென்றுகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

குடும்பத்தினருடன் மாத்யூ தாமஸ்.

இந்த விபத்தில், மாத்யூவின் உறவினர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மாத்யூவின் அப்பா, அம்மா, சகோதரர்கள் காயம் அடைந்தனர். தற்போது, அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் இணைந்த அயோத்தி கூட்டணி!

பிரபல நடிகரின் குடும்பத்தினர் அனைவரும் விபத்தில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *