பிரதமர் மோடி, மாநிலங்களுக்கிடையே மோதலையும் வெறுப்புணர்வையும் தூண்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் இலவசப் பேருந்துகளின் பயன்பாடு அதிகரித்ததால், மெட்ரோ ரயில்களின் பயன்பாடு குறைந்து, அதன் வருவாயும் குறைந்து வருவதாகக் கூறியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவொன்றினைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், பிரதமர் மோடி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்றும், பிரதமர் வீண்பழி போடுவதாகவும் கூறியுள்ளார்.
7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் இரு கட்டங்களுக்கான தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் இலவசப் பேருந்துகளின் பயன்பாடு அதிகரித்ததால், மெட்ரோ ரயில்களின் பயன்பாடு குறைந்து, அதன் வருவாயும் குறைந்து வருவதாகக் கூறியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவொன்றினைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், பிரதமர் மோடி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்றும், பிரதமர் வீண்பழி போடுவதாகவும் கூறியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில், பிரதமர் மோடி “சில மாநிலங்களில் இலவசப் பேருந்துகள் பயன்பாடு உள்ளதால், மெட்ரோ ரயில்களின் பயன்பாடு குறைந்து, மெட்ரோவின் மூலம் அரசுக்கு வரும் வருவாய் குறைந்து வருவதாகவும்” கூறியிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக, முதலமைச்சர் ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவொன்றினைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், ’பத்தாண்டுகால ஆட்சியில் சாதனைகள் எதுவும் இல்லாததால், எதிர்க்கட்சிகள் ஆளும் பிற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள்நலத் திட்டங்களை, பிரதமர் மோடி கொச்சைப்படுத்தி வருவதாக’ கூறியுள்ளார். மேலும், ”மகளிருக்கான இலவசப் பேருந்துத் திட்டத்தினால் மெட்ரோ ரயிலின் பயன்பாடு குறைந்து வருவதாக கூறுவது, பிரதமர் மோடியின் வீண்பழியே” என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து கூறியிருப்பதாவது, ’மெட்ரோ, 2019-இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்களையும், 2023-இல் 9 கோடியே 11 லட்சம் பயணங்களையும் கொண்டிருப்பதாகவும்’ கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மெட்ரோவின் பயன்பாடும் அதிகரித்துள்ளதாகவே பதிவிட்டுள்ளார்.
தோல்வி பயம் என்ன செய்யும்?
பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும்!
இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் – பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும்… pic.twitter.com/g9Wx49Dzfw
— M.K.Stalin (@mkstalin) May 18, 2024
”தோல்வி பயம் என்ன செய்யும்?
பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும்!
’இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் – பிரதமர்’ என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும் தூண்டச் செய்யும்!
ஜூன்-4 இந்தப் பொய்கள் உடைபடும்! வெறுப்பு அகலும்! #INDIA வெல்லும்!” என்கிற உரையுடன் பதிவிட்டுள்ளார், முதலமைச்சர் ஸ்டாலின்..
