Sorting by

×

மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வரும் 20ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை தாராவியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இத்தேர்தலுக்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஈடுபடுகிறார். இரண்டு நாள்களுக்கு முன்பு காட்கோபர் பகுதியில் ராட்சத விளம்பர போர்டு விழுந்து 16 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அக்காட்கோபர் பகுதியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரமாக ரோடு ஷோ நடத்துகிறார். இதற்காக அங்குள்ள பிரதான சாலை பிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர முதல்வர் ஷிண்டேயின் மகன் போட்டியிடும் கல்யான் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு மோடி உரையாற்ற இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா (உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத், ”அவர்கள் (பா.ஜ.க) என்ன விலை கொடுத்தேனும் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். அவர்கள் தேர்தல் மாஃபியாக்கள். இன்றைக்கு பிரதமர் மோடி நாசிக், கல்யானில் இருக்கிறார். எப்போது டெல்லியில் இருந்து பிரதமருக்கான வேலையை செய்யப்போகிறார்.

பிரதமர் எங்கு பயணம் செய்தாலும் மகாவிகாஷ் அகாடிதான் வெற்றி பெறப்போகிறது. மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். பா.ஜ.க இங்கு தோல்வியை தழுவும். பிரதமருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் அனைத்து இடத்திலும் பிரசாரம் செய்கிறார். இதே பிரதமர்தான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேலுக்கு தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு இருப்பதாக சொன்னார். இன்று அதே பிரபுல் பட்டேலுடன் பிரதமர் இருக்கிறார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

மும்பை: புழுதிக் காற்றால் சரிந்த ராட்சத விளம்பரப் பலகை; பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு; 60 பேர் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *